செவ்வாய், 14 டிசம்பர், 2010

ஓரு அறிவியல் கேள்வி

என்னுடைய அறிவியல் கேள்விக்கு பதில் சொல்ல http://juniorsamurai.blogspot.com/2010/11/blog-post.html இங்கு கிளிக் செய்யவும்

ஓரு அறிவியல் கேள்வி

என்னுடைய அறிவியல் கேள்விக்கு பதில் சொல்ல http://juniorsamurai.blogspot.com/2010/11/blog-post.html இங்கு கிளிக் செய்யவும்

வெள்ளி, 19 நவம்பர், 2010

ஒரு அறிவியல் கேள்வி

விஞ்ஞான வளர்ச்சியின் உச்சம் எது ?
அது மனித அறிவு வளர்ச்சியின் எல்லையாக இருக்கும் என்று நினைக்கிறன்.
அதைப்பற்றி மற்றவர்களின் ஆர்வம எவ்வாறு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளத்தான் இந்து கேள்வி

பல வகையான விசயங்களை DATA ஆக கன்வர்ட் செய்ய முடித்த மனிதனால் மனிதனின் மூளையில் பதிந்து
உள்ள நினைவுகளையும் ஒளிந்துள்ள எண்ணங்களையும் DATA ஆக கன்வர்ட் செய்யமுடிந்தால் ?


ம்ம்...., ஆகட்டும் உங்கள் கற்பனை குதிரைகளை அவிழ்த்து விடுங்கள் அது தாறுமாறாக ஓடட்டும்

ஞாயிறு, 21 மார்ச், 2010

உலகின் இறுதி நாள்

உலகம் அழிவதைப்பற்றி நிறைய கருத்துக்கள் உலகின் பல இடங்களில் இருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன ஆனால் நாம்தான் அதை எல்லாம் அலட்சியம் செய்துகொண்டு இருக்கிறோம் பதிலுக்கு நானும் ஓன்று சொல்ல உங்களில் பலர் "கிளம்பிட்டான்யா " என்று சொல்வது ஏன் காதில் கேட்கத்தான் செய்கிறது.

ஷேக்ஸ்பியர் சொன்னது "இந்த உலகம் ஒரு நாடக மேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள்" என்று ஆம் அது உண்மைதான் ஆனால் இதில் கவலைப்படக்கூடிய விஷயம் என்ன என்றால் அந்த நாடகம் முடியும் தருணம் இப்போது நெருங்கி விட்டது என்பதுதான்.

உலகை அழிக்க வேற்று கிரகத்தில் இருந்து வினோதமான உயிரினங்கள் வர வேண்டியது இல்லை , வானில் இருந்து கற்க்களும் வால் நட்சத்திரமும் பூமியில் மோத வேண்டியது இல்லை சுனாமியோ நிலநடுக்கமோ உலகை ஒட்டு மொத்தமாய் அழித்துவிடப் போவதில்லை ஏனெனில் உலகை அழிக்கும் வேலையைத்தான் நாம் எல்லாம் சேர்ந்து பல காலமாய் செய்து கொண்டு இருக்கிறோம்


அநேகமாக உங்களில் பலர் சமீபத்தில் வெளியான "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் அதில் சோழர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலையை சொல்லி இருப்பார்கள் அதில் சோழர்கள் நர மாமிசம் சாப்பிட்டு வாழ்வதாய் சொல்லி இருப்பார்கள் ஆனால் அவர்களிடம் தங்கம் வைரம் எல்லாம் சாலையில் கிடக்கும் குப்பை கூளங்கள் போல கிடக்கும் இத்தனை இருந்தும் உணவுக்கு வழியில்லாமல் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டிய தாயின் மார்பில் கூட ரத்தம் தான் வருவது போலவும் சொல்லி இருப்பார்கள்

அதை போல நம் வாரிசுகளும் கண்ணில் காணும் மனிதனை எல்லாம் அடித்து தின்னும் நாள் வெகு தொலைவில் இல்லை மாளிகை வீட்டில் வசிப்பவர்கள் கூட
அரைப்படி அரிசிக்காக ஏழையின் குடிசையில் திருடும் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது , உங்கள் வாரிசுகளில் ஒருவரை ஒரு சொம்பு குடிநீருக்காக அடுத்தவன் அடித்து கொல்லும் நாள் இதோ இன்னும் சிறிது தொலைவில்தான் இருக்கிறது, ஏனெனில் இன்று நாம் எல்லாம் நரகத்தின் விதைகளை மண்ணில் விதைக்க ஆரம்பித்துவிட்டோம் நமக்குப்பிறகு நம் வாரிசுகள்தான் அதை அறுவடை செய்து அனுபவிக்க போகிறார்கள்.

ரியல் எஸ்டேட் என்ற பெயரில் இன்று பணம் ஈட்ட நாம் செய்து கொண்டு இருக்கும் தொழில்தான் உலகை அழிக்கும் நமது முயற்சியின் மிகப்பெரிய அத்தியாயம் நன்றாக பசுமை செழிப்புடன் விளைந்து கொண்டு இருக்கும் நிலங்களை எல்லாம் ரியல் எஸ்டேட் செய்கிறேன் என்று சொல்லி விவசாயத்தை கொன்று அதன் விதைகளை தின்று விளைநிலமாக இருந்ததை பொட்டல் காடாக்கி விடுகிறோம்.

பிறகு என்ன அந்த விவசாயி நிலத்தை விற்ற பணத்தை வைத்தே தன்னுடைய ஆயுளை ஒட்டி விடுகிறார், இன்னும் ஒரு படி மேலே பொய் பார்த்தால் நிலத்தை விற்ற அந்த விவசாயி தனக்குப்பிறகு தன்னுடைய வாரிசுகளில் யாரும் விவசாயத்தில் ஈடுபடுவதை விரும்பாதவராய் வேறு தொழிலுக்கு மாற்றிவிடுகிறார் , இப்படியாக வேகமாக விவசாயி வர்க்கத்தை அழித்துக்கொண்டு வருவதை பார்த்தால் " உலகின் இறுதி நாள் " வெகு வேகமாக வந்து விடும் போல இருக்கிறது

பணம் ஈட்ட பல வழிகள் இருக்க நம்மை நாமே அழித்துகொள்ளும் இந்த ரியல் எஸ்டேட் எதற்கு .

திங்கள், 15 மார்ச், 2010

காதல் வந்த போது !!

Tamilish இதோ இதுதான் எனது முதல் பதிவு என் டயரியில் மட்டுமே பிரசுரமான
என் எழுத்துக்களை முதல் முறையாக ஒரு பொது இடத்தில் பிரசுரம் செய்யும்
என் முயற்சியின் முதல் படி ! இந்த கவிதை 2001ம் வருடம் நான் எழுதி
மாலை மலர் தேன் மலரில் வெளியானது , உண்மையாகவே உள்ளத்தில் இருந்து
வந்த கவிதை சிலருக்கு இந்த கவிதை சிரிப்பை கூட வர வைக்கலாம் ஆனால் எனக்கு என்ன வர வைத்தது என்று பாருங்கள்,

காதல் வந்த போது

பசிக்குது
ஆனால் எனக்கு சாப்பிட பிடிக்கல !

தூக்கம் வருது
ஆனால் எனக்கு தூங்க பிடிக்கல !

சிரிப்பு வருது
ஆனால் எனக்கு சிரிக்க பிடிகல !

அழுகை வருது
ஆனால் எனக்கு அழ பிடிக்கல !

காதல் வருது
ஆனால் காதலிக்கு என்ன பிடிக்கல !?

கவிதைய படிச்சுட்டு பிடிச்சிருந்தா பின்னூட்டம் போடுங்க ,