திங்கள், 15 மார்ச், 2010

காதல் வந்த போது !!

Tamilish இதோ இதுதான் எனது முதல் பதிவு என் டயரியில் மட்டுமே பிரசுரமான
என் எழுத்துக்களை முதல் முறையாக ஒரு பொது இடத்தில் பிரசுரம் செய்யும்
என் முயற்சியின் முதல் படி ! இந்த கவிதை 2001ம் வருடம் நான் எழுதி
மாலை மலர் தேன் மலரில் வெளியானது , உண்மையாகவே உள்ளத்தில் இருந்து
வந்த கவிதை சிலருக்கு இந்த கவிதை சிரிப்பை கூட வர வைக்கலாம் ஆனால் எனக்கு என்ன வர வைத்தது என்று பாருங்கள்,

காதல் வந்த போது

பசிக்குது
ஆனால் எனக்கு சாப்பிட பிடிக்கல !

தூக்கம் வருது
ஆனால் எனக்கு தூங்க பிடிக்கல !

சிரிப்பு வருது
ஆனால் எனக்கு சிரிக்க பிடிகல !

அழுகை வருது
ஆனால் எனக்கு அழ பிடிக்கல !

காதல் வருது
ஆனால் காதலிக்கு என்ன பிடிக்கல !?

கவிதைய படிச்சுட்டு பிடிச்சிருந்தா பின்னூட்டம் போடுங்க ,

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மிக நன்று

Prathap Kumar S. சொன்னது…

நல்லதான் இருக்கு...வித்தியசாமா யோசிச்சிறீக்கீங்க...

க.பாலாசி சொன்னது…

நல்லாயிருக்குங்க தலைவரே.... நிறைய எழுதுங்க...

கண்ணகி சொன்னது…

நல்லாத்தானே கவிதை சொல்றிங்க..அப்புறம் ஏன் மறுபடி எழுதல....